Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் ரூ.50 லட்சத்தில் சர்வீஸ் ரோடு பணி விரைவில் துவக்கம்

தென்காசியில் ரூ.50 லட்சத்தில் சர்வீஸ் ரோடு பணி விரைவில் துவக்கம்

தென்காசியில் ரூ.50 லட்சத்தில் சர்வீஸ் ரோடு பணி விரைவில் துவக்கம்

தென்காசியில் ரூ.50 லட்சத்தில் சர்வீஸ் ரோடு பணி விரைவில் துவக்கம்

ADDED : ஆக 29, 2011 11:59 PM


Google News

தென்காசி: தென்காசியில் 50 லட்சம் ரூபாய் செலவில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட இருக்கிறது தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2009ம் ஆண்டு துவங்கியது.

பணி துவங்கும் போது உடனடியாக சர்வீஸ் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாமலேயே மேம்பால பணி நடந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் பகுதியின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும். இதற்காக அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தனியார் கட்டடங்கள் மட்டும் இடிக்கப்பட வேண்டும்.



இந்நிலையில் சர்வீஸ் ரோடு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமாரிடமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சரத்குமார் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட இருக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்காலிகமாக மேடு பள்ளங்களை மண் போட்டு சமன் செய்ய நடவடிக்கை எடுத்தார். விரைவில் சர்வீஸ் ரோடு அமைக்க அதிகாரிகளை எம்.எல்.ஏ.,வலியுறுத்தினர். இதனையடுத்து சர்வீஸ் ரோடு அமைக்க 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட இருக்கும் பகுதியை நேற்று தென்காசி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சர்வீஸ் சாலை ஓரமாக மின் கம்பங்கள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்ததையும் ஆர்.டி.ஓ.பார்வையிட்டார். ரயில்வே கேட்டின் தென்பகுதி மற்றும் வடபகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் துக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள், நெடுஞ்சாலை துறை அதிகாரி சமுத்திரக்கனி, நகராட்சி கமிஷனர் செழியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us