/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூர் பகுதியில் கல்விக்கடன் வழங்கும் பாங்குகளை அறிவிக்க வேண்டுகடையநல்லூர் பகுதியில் கல்விக்கடன் வழங்கும் பாங்குகளை அறிவிக்க வேண்டு
கடையநல்லூர் பகுதியில் கல்விக்கடன் வழங்கும் பாங்குகளை அறிவிக்க வேண்டு
கடையநல்லூர் பகுதியில் கல்விக்கடன் வழங்கும் பாங்குகளை அறிவிக்க வேண்டு
கடையநல்லூர் பகுதியில் கல்விக்கடன் வழங்கும் பாங்குகளை அறிவிக்க வேண்டு
ADDED : ஆக 01, 2011 01:59 AM
கடையநல்லூர் : கடையநல்லூர் வட்டார பகுதிகளில் கல்விக்கடன் பெறுவதற்கான
வங்கிகள் முறையாக அறிவிக்கப்படாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையாக
அலைக்கழிக்கப்படும் நிலை காணப்பட்டு வருகிறது.மாணவ, மாணவிகளின் கல்வி நலன்
கருதி வங்கிகள் மூலம் கடன் வசதி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது
பெரும்பாலான மேற்படிப்புகளுக்கு கவுன்சிலிங் முடிவடைந்து வரும் நிலையில்
வங்கிகள் மூலம் கடன் வசதி பெறுவதற்கு பெற்றோர்கள் அதற்கான பணிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கடையநல்லூர், சொக்கம்பட்டி,
காசிதர்மம், இடைகால், அச்சன்புதூர், செங்கோட்டை உள்ளிட்ட
சுற்றுப்பகுதிகளில் கல்விக்கடன் பெறுவதற்காக தங்கள் பகுதிகளுக்கு எந்த
வங்கிகள் கடன் வழங்குகின்றன என்பது குறித்த முறையான அறிவிப்பு கிடைக்கப்
பெறாததால் மாணவர்களும், பெற்றோர்களும் கடுமையாக அலைக்கழிக்கப்படும்
சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.இன்னும் சில தினங்களில் இன்ஜினியரிங்
உள்ளிட்ட படிப்பகளை தொடர மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால்
உரிய கல்வி கட்டணம் காலதாமதம் இன்றி செலுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில்
காணப்பட்டு வருகின்றனர். ஆனால் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்குவதற்கு
கடையநல்லூர் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள மாணவர்கள் இதனை பெற முறையான
அறிவிப்பு இல்லாததால் பெரும் வேதனையடைந்துள்ளனர்.எனவே மாணவர்களின்
உயர்கல்வியை கருத்தில் கொண்டு கல்விக்கடன் காலதாமதமின்றி கிடைத்திடும்
வகையில் கடையநல்லூர் சுற்றுப்பகுதிகளில் கிராமங்களுக்கு எந்தெந்த வங்கிகள்
மூலம் கடன் வசதி வழங்கப்படுகிறது என்பதனை மாவட்ட முன்னோடி வங்கி வெளியிட
வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும், மாவட்ட நிர்வாகத்தை
வலியுறுத்தியுள்ளனர்.