/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு : அண்ணன், தம்பி கைதுகரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு : அண்ணன், தம்பி கைது
கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு : அண்ணன், தம்பி கைது
கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு : அண்ணன், தம்பி கைது
கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு : அண்ணன், தம்பி கைது
ADDED : ஆக 09, 2011 02:29 AM
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள சென்னிகுளம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் முனியசாமி மனைவி சின்னத்துரைச்சி (20). இவருக்கு திருமணமாகி சுமார் 8 மாதங்கள் ஆகிறது. இவரது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சின்னத்துரைச்சி சம்பவத்தன்று மாலை இயற்கை உபாதைகள் கழிக்க வீட்டிற்கு கிழக்கேயுள்ள வேலியின் உள்பக்கம் சென்றாராம்.அப்போது இரண்டு வாலிபர்கள் திடீரென இவரது வாயை பொத்தி கழுத்தில் அணிந்திருந்த தாலியுடன் கூடிய மூன்றரை பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு ஓடினராம். இந்த நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இச்சம்பவம் குறித்து சின்னத்துரைச்சி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்.சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி இந்த வழக்கு தொடர்பாக வடக்கு மலையடிப்பட்டி காலனியை சேர்ந்த துரைச்சாமி மகன்கள் சரத்குமார் (19), முத்துக்குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க செயினை கைப்பற்றினர்.மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தெற்கு மலையடிப்பட்டி ராஜலிங்கம் மகன் முத்துக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


