/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடந்ததுசிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடந்தது
சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடந்தது
சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடந்தது
சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடந்தது
புதுச்சேரி : புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட பொறியியல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
இவர்களுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று துவங்கியது. சென்டாக் கன்வீனர் ஜெயக்குமார், சேர்க்கை குழு தலைவர் சிவாஜி, பி.டெக்.,ஒருங்கிணைப்பாளர் அழகுமூர்த்தி உள்ளிட்டோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி சேர்க்கை அனுமதி கடிதத்தை வழங்கினார்.முதலில் விடுதலைப்போராட்ட வீரர் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக முனைப்பு காட்டியதால் புதுச்சேரி பொறியில் கல்லூரி 15 விடுதலைப்போராட்ட வீரர்களுக்கான இடங்களும், காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரியில் 7 இடங்களும் வேகமாக நிரம்பின.
அடுத்ததாக மாற்றுதிறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடந்தது. 10 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தும் குறைவான மாணவர்களே கலந்து கொண்டனர். புதுச்சேரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று 28 ம்தேதி காலை 9 மணிக்கு துவங்குகிறது. முதல் பிரிவு கவுன்சிலிங்கில் 199.667 முதல் 196.444 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 10 மணிக்கு 196.333 முதல் 194 வரை, 11 மணிக்கு 193.667 முதல் 192.222 வரை, 12 மணிக்கு 192 முதல் 194.444 வரை, 2 மணிக்கு 190.333 முதல் 188.667 வரை, 3 மணிக்கு 188.444 முதல் 187.333 வரை, 4 மணிக்கு 187 முதல் 185 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற 502 மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.