சுவாமி நிகாமனந்தா மரணம்:சி.பி.ஐ. விசாரிக்க முடிவு
சுவாமி நிகாமனந்தா மரணம்:சி.பி.ஐ. விசாரிக்க முடிவு
சுவாமி நிகாமனந்தா மரணம்:சி.பி.ஐ. விசாரிக்க முடிவு
UPDATED : ஆக 06, 2011 02:39 PM
ADDED : ஆக 06, 2011 07:13 AM
புதுடில்லி: கங்கை நதி மாசுபடுவதை தடுத்திட கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மரணம் குறித்து சி.பி.ஐ.
விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி நிகமானந்தா, கங்கை நிதி மாசுபடுவதை தடுக்க கோரியும், கும்பா பகுதியில் நடந்து வரும் சட்டவிரோத சுரங்கங்களை நிறுத்திட கோரி ஹரித்துவாரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் கோமா நிலையில் இருந்த நிகாமனந்தா உடல் உறுப்புக்கள் செயல் இழந்து கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி இறந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் குற்றம் சாட்டியிருந்தன. முதல்வர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.ஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சுவாமி நிகாமனந்தா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணையை துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.