/உள்ளூர் செய்திகள்/தேனி/ஏலத்தோட்டங்களில் "அழுகல்' கட்டுப்படுத்த ஆலோசனைஏலத்தோட்டங்களில் "அழுகல்' கட்டுப்படுத்த ஆலோசனை
ஏலத்தோட்டங்களில் "அழுகல்' கட்டுப்படுத்த ஆலோசனை
ஏலத்தோட்டங்களில் "அழுகல்' கட்டுப்படுத்த ஆலோசனை
ஏலத்தோட்டங்களில் "அழுகல்' கட்டுப்படுத்த ஆலோசனை
கம்பம் : ஏலத்தோட்டங்களில் 'அழுகல்' நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய செடிகளில் கட்டுப்படுத்தவும், கே.சி.பி.எம்.சி.,யின் பூச்சிமருந்து பிரிவு ஆலோசனை வழங்கி உள்ளது.
அழுகல் நோய் தொடர்பாக கே.சி.பி.எம்.சி.யின் உரம் மற்றும் பூச்சி மருந்து பிரிவு மேலாளர் வி.எம். அன்பழகன் கூறியிருப்பதாவது : அழுகல் நோய் தாக்காமல் இருக்க, காப்பர் சல்பேட் அல்லது காப்பர் ஆக்சிக் குளோரைட் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். பாதிக்கப்பட்ட தோட்டங்களில் பாலிகியூர் 100 மில்லியுடன் காப்பர் ஆக்சி குளோரைடு 200 கிராம், அக்ரோபேட் 100 கிராம் மருந்துடன் காப்பர் ஆக்கி குளோரைடு 200 கிராம், மெலடி டியோ 200 கிராம்,செக்டின் 200 கிராம்,மோக்சிமேட் 200 கிராம் மருந்துடன் காப்பர் ஆக்சி குளோரைடு 200 கிராம், ரிடோமில் 300 கிராம், மெட்கோ 100 கிராம் ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் மீது தெளிக்கலாம், என்றார்.