/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஞானமணி கல்லூரியில் "ஞான் புக் எக்ஸ்போ 2011'ஞானமணி கல்லூரியில் "ஞான் புக் எக்ஸ்போ 2011'
ஞானமணி கல்லூரியில் "ஞான் புக் எக்ஸ்போ 2011'
ஞானமணி கல்லூரியில் "ஞான் புக் எக்ஸ்போ 2011'
ஞானமணி கல்லூரியில் "ஞான் புக் எக்ஸ்போ 2011'
ADDED : ஆக 01, 2011 03:48 AM
ராசிபுரம்: ராசிபுரம், ஞானமணி கல்லூரி நூலகத்துறை சார்பில், 'ஞான் புக்
எக்ஸ்போ- 2011' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடந்தது.கல்வி நிறுவன
தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார்.
கல்லூரி முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி
பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா கண்காட்சியை
துவக்கி வைத்தார்.மாணவ, மாணவியரிடையே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை துண்டும்
விதமாகவும், அதன் மூலம் தொழில் நுட்பத் திறனை மேம்படுத்தவும், தொழில்
நுட்ப தகவல்களை பெறவும் இக்கண்காட்சி அமைந்தது.கண்காட்சியில், ஞானமணி கல்வி
நிறுவனத்தின் நூலகத்துறையில் இருந்தும், 25க்கும் மேற்பட்ட புத்தக
வெளியீட்டாளர்களின், 20 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள்
இடம்பெற்றிருந்தன.நிகழ்ச்சியில், தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர்
சிவக்குமார், இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் திரவியம், நூலகர் ரமேஷ்,
துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.