/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புளியங்குடி கோயில் புதிய தேர் செப்.2ம் தேதி வெள்ளோட்டம் : அமைச்சர்கள் பங்கேற்புபுளியங்குடி கோயில் புதிய தேர் செப்.2ம் தேதி வெள்ளோட்டம் : அமைச்சர்கள் பங்கேற்பு
புளியங்குடி கோயில் புதிய தேர் செப்.2ம் தேதி வெள்ளோட்டம் : அமைச்சர்கள் பங்கேற்பு
புளியங்குடி கோயில் புதிய தேர் செப்.2ம் தேதி வெள்ளோட்டம் : அமைச்சர்கள் பங்கேற்பு
புளியங்குடி கோயில் புதிய தேர் செப்.2ம் தேதி வெள்ளோட்டம் : அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 30, 2011 12:03 AM
புளியங்குடி : புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் வரும் செப்.2ம் தேதி நடக்கிறது.
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்ட விழா வரும் செப்.2ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அமைச்சர் கருப்பசாமி, தென்காசி எம்.பி. லிங்கம், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ துரையப்பா, புளியங்குடி நகராட்சி தலைவர் (பொறுப்பு) முகம்மது இஸ்மாயில், நகராட்சி பொறியாளர் முகம்மது ஷெரீப், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ராஜாராம், ஆணையர் முத்தையா கலைவாணன், கூடுதல் ஆணையர்கள் (விசாரணை) சுப்பிரமணியன், தனபால் (பொறுப்பு), இணை ஆணையம் (தலைமையிடம்) திருமகள், இணை ஆணையர் புகழேந்தி, துணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையாளர் கவிதா பிரியதர்ஷினி, உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் திருநாகலிங்கம், நெல்லை கலெக்டர் செல்வராஜ், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.ராஜேந்திரன், மாவட்ட எஸ்.பி.விஜயேந்திபிதரி கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தேர் திருப்பணி கமிட்டி தலைவர் சங்கரநாராயணன், செயல் அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் ராமசாமி, தக்கார் ராமராஜா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.