/உள்ளூர் செய்திகள்/சேலம்/வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்
வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்
வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்
வேலை செய்ய வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் சாலை மறியல்
ADDED : ஆக 01, 2011 04:14 AM
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை
செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதி
திட்டத்தின் கீழ் புது ஏரியில் இருந்து, பெரியசாமி கோவில் வரையில் உள்ள
வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது வருகிறது.நேற்று காலை வாய்க்கால்
தூர்வாரும் பணி மேற்கொள்ள பெண் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, 'இன்று
வேலை இல்லை', என பணி செய்ய வந்த தொழிலாளர்களை, பஞ்சாயத்து நிர்வாகத்தினர்
திருப்பி அனுப்பியுள்ளனர்.அதைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான தொழிலாளர்கள்,
இலங்கை தமிழர் முகாம் அருகில், காலை 10.50 மணியளவில் மண்வெட்டி, தட்டு
உள்ளிட்டவைகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த
தம்மம்பட்டி போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது.போலீஸார் எச்சரித்ததால்,
தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனால், ஆத்தூர் -
துறையூர் நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.