/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாதை கோரி ஐகோர்ட்டுக்கு நிலம் கொடுத்தவர் மனுபாதை கோரி ஐகோர்ட்டுக்கு நிலம் கொடுத்தவர் மனு
பாதை கோரி ஐகோர்ட்டுக்கு நிலம் கொடுத்தவர் மனு
பாதை கோரி ஐகோர்ட்டுக்கு நிலம் கொடுத்தவர் மனு
பாதை கோரி ஐகோர்ட்டுக்கு நிலம் கொடுத்தவர் மனு
ADDED : செப் 22, 2011 01:07 AM
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளைக்கு நிலம் கொடுத்தவர் பாதை கோரி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை நீதிபதிகள் நாளை தள்ளிவைத்தனர்.மதுரை யாகப்பாநகர் ஜானகியம்மாள் தாக்கல் செய்த மனு:
உலகனேரியில் எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் இருந்தது.
ஐகோர்ட் கிளைக்காக ஒரு ஏக்கர் 12 சென்ட் நிலமும், தேசிய நெடுஞ்சாலை அமைக்க 14 சென்ட் நிலமும் கொடுத்தேன். மீதம் 71 சென்ட் நிலம் உள்ளது. நிலத்திற்கு செல்ல முடியாமல் இரு பகுதிகளிலும் ஐகோர்ட் கிளையின் சுற்றுச்சுவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு வேலிகள் உள்ளன. நிலத்திற்கு செல்லும் வழியில் இரும்பு கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றி நிலத்திற்கு செல்ல பாதை கேட்டு பதிவாளருக்கு மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை. நிலத்திற்கு செல்ல 20 அடிக்கு பாதை அமைக்க உத்தரவிட வேண்டும் என, கோரினார். மனு மீதான இறுதி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி பி.ஜோதிமணி உத்தரவிட்டார்.