Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

அகண்ட அமெரிக்கா; வரைபடம் வெளியிட்டு வம்பிழுக்கும் டிரம்ப்!

ADDED : ஜன 08, 2025 10:02 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: கனடாவை, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்ப், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமெரிக்கா, 50 மாகாணங்களை உள்ளடக்கிய நாடு. இதில், 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் (தேர்வு) டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

தனது விருப்பத்தை நேரடியாக கனடா நாட்டு பிரதமரிடமே தெரிவித்துவிட்டார். அதை, கனடா நாட்டு அரசியல்வாதிகள் யாரும் பொருட்படுத்தவில்லை. என்னிடம் தன் முயற்சியை கைவிடாத டிரம்ப், தொடர்ந்து அதை வலியுறுத்தி சமூக வலை தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

'கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்' என்ற ஆபரையும் வழங்கி இருந்தார்.

தற்போது அவர் அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், , 'பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

டிரம்பின் இந்த கூற்றுக்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ கண்டனம் தெரிவித்தார்.

கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும். அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும்.

கிரீன்லாந்து நாட்டிற்கு, சமீபத்தில் உரிமை கொண்டாடினார். கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என்று கூறிய டிரம்ப் கருத்து தெரிவித்தார். இதற்கு 'கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை' என அந்நாட்டு பிரதமர் மூட் எகெடே திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதை பொருட்படுத்தாத டிரம்ப், தனது மகனை கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவர் சென்றபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us