/உள்ளூர் செய்திகள்/கரூர்/பெற்றோரை சேர்த்து வைக்க கலெக்டரிடம் மகன் மனுபெற்றோரை சேர்த்து வைக்க கலெக்டரிடம் மகன் மனு
பெற்றோரை சேர்த்து வைக்க கலெக்டரிடம் மகன் மனு
பெற்றோரை சேர்த்து வைக்க கலெக்டரிடம் மகன் மனு
பெற்றோரை சேர்த்து வைக்க கலெக்டரிடம் மகன் மனு
ADDED : செப் 06, 2011 12:10 AM
கரூர்: கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் பெற்றோர்களை சேர்த்து வைக்ககோரி பள்ளி மாணவன், நேற்று நடந்த குறைதீர் முகாமில் கரூர் கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தார்.
கரூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ் (38). இவருடைய மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு சரண் (15) என்ற மகன் உள்ளார். கனகராஜூம், விஜயலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். கரூரில் உள்ள பாட்டி சிவகாமி வீட்டில் தங்கியுள்ள சரண் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த சரண், குறைதீர் முகாமில் இருந்த கலெக்டர் ÷ஷாபனாவிடம், பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்ககோரி மனு கொடுத்தார். இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளை அழைத்த கலெக்டர் ÷ஷாபனா, சரணின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார். பெற்றோர்களை சேர்த்து வைக்ககோரி பள்ளி மாணவன் மனு கொடுத்த சம்பவத்தால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.