ADDED : செப் 26, 2011 10:45 PM
சரவணம்பட்டி : கோவை, குமரகுரு கல்லூரியில் சர்வதேச அமைதி தின விழா கொண்டாடப்பட்டது.
கோவை, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் மேலாண்மை துறையில், மனித வள மேம்பாட்டு மையமும், நமது பங்கு திட்டமும் இணைந்து, சர்வதேச அமைதி தினத்தை கொண்டாடின. இதையொட்டி, அமைதிக்கு மனித இனத்தின் பங்கு குறித்த போட்டி நடந்தது. ஓவியம், கவிதை, மாடல்கள், பென்சில் ஓவியம் போன்றவற்றில் இந்த கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. அமைதியை வலியுறுத்தி, மாணவர்கள், கையெழுத்து இயக்கம் நடத்தினர். அமைதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைதி தின விழா வழிவகுத்துள்ளது. இயந்திரவியல் துறை மாணவர்கள், அமைதிக்கான பாடலை எழுதி, இசை அமைத்தனர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.