/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து தி.மு.க.,செயலாளர் மீது வழக்குப்பதிவுசொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து தி.மு.க.,செயலாளர் மீது வழக்குப்பதிவு
சொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து தி.மு.க.,செயலாளர் மீது வழக்குப்பதிவு
சொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து தி.மு.க.,செயலாளர் மீது வழக்குப்பதிவு
சொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து தி.மு.க.,செயலாளர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 12, 2011 02:02 AM
பல்லடம் : சொத்து பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக, சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் வி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன்; சூலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, தங்களது வீடு மற்றும் நிலம் சுல்தான்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர் வேலுச்சாமி உட்பட ஐந்து பேர் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் அனுப்பினார். இப்புகாரை பதிவு செய்யும்படி, எஸ்.பி., பாலகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்புகாரை, போலீசார் பதிவு செய்தனர். நாகராஜ் அளித்துள்ள புகார் விவரம்: எனக்கும், என்னுடைய அப்பாவுக்கும் சேர வேண்டிய மொத்த சொத்தையும், சித்தப்பா தண்டபாணி அடைய முயல்கிறார். சொத்து தொடர்பான பேச்சுக்கு, சுல்தான்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர் வேலுச்சாமி வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்தனர். எங்களுக்கு சொந்தமான 11.75 சென்டில் உள்ள வீடு மற்றும் காலியிடம் மதிப்பு ரூ.9.5 லட்சம். இதை ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, சுந்தரம் ஆகியோர் கட்டப்பஞ்சாயத்து மூலம் ரூ.2.3 லட்சத்துக்கு எனது சித்தப்பா தண்டபாணிக்கு கொடுக்க வேண்டும் என மிரட்டினர். கட்டாயப்படுத்தி ஏற்கனவே தயார் செய்திருந்த பத்திரத்தில் என்னிடமும், எனது தந்தை ராமசாமியிடமும் கையெழுத்து வாங்கினர். சித்தப்பாவுக்கு சொத்து முழுவதையும் கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இப்புகார் அடிப்படையில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


