மனிதாபிமான அடிப்படையில் ரயில்வேயில் வேலை
மனிதாபிமான அடிப்படையில் ரயில்வேயில் வேலை
மனிதாபிமான அடிப்படையில் ரயில்வேயில் வேலை
UPDATED : ஆக 19, 2011 09:58 PM
ADDED : ஆக 19, 2011 08:45 PM
புதுடில்லி : ''இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி வரை, ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 264 பேருக்கு, மனிதாபிமான அடிப்படையில், ரயில்வேயில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என, ராஜ்யசபாவில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,''அதேநேரத்தில், இன்னும் 112 பேர் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில், விதிகளை தளர்த்தி இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவும், குரூப் 'டி' பிரிவில் மட்டுமே இந்த வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முறையான பரிசீலனைக்குப் பின்னரே, 264 பேருக்கும் வேலை தரப்பட்டுள்ளது. ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பாக, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 217 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், உணவுகளின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.