/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒச்சுபாலுவுக்கு போலீஸ் காவல்கோரிய மனு மீது இன்று முடிவுஒச்சுபாலுவுக்கு போலீஸ் காவல்கோரிய மனு மீது இன்று முடிவு
ஒச்சுபாலுவுக்கு போலீஸ் காவல்கோரிய மனு மீது இன்று முடிவு
ஒச்சுபாலுவுக்கு போலீஸ் காவல்கோரிய மனு மீது இன்று முடிவு
ஒச்சுபாலுவுக்கு போலீஸ் காவல்கோரிய மனு மீது இன்று முடிவு
ADDED : ஆக 19, 2011 04:56 AM
மதுரை:மதுரை மூன்றாம் பகுதி தி.மு.க., செயலாளர் ஒச்சுபாலு.கரிமேட்டை
சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மோகன்தாஸ் காந்தியிடம், மத்திய அமைச்சர்
அழகிரியின் பிறந்த நாளை கொண்டாட, ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்கியதாக ஒச்சுபாலு
மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
அதுபோல வடக்குமாசி வீதி நகைப்பட்டறை
உரிமையாளர் குமாரின் வீடு மற்றும் நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும்
ஒச்சுபாலு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் கைது
செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அவர் கடலூர்
சிறையில் அடைக்கப்பட்டார்.இவ்வழக்குகளில் அவரை மேலும் விசாரிக்க வேண்டி
மூன்று நாள் போலீஸ் காவல் விடக் கோரி ஐந்தாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் கரிமேடு போலீசார் மனு செய்தனர். மனு மீது நேற்று விசாரணை
நடந்தது. ஒச்சுபாலு ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்
(பொறுப்பு) கதிரவன், முடிவை இன்றைக்கு தள்ளிவைத்தார்.