/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உயர் தொடக்கநிலை வகுப்புக்கான ஆங்கில பயிற்சி: நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்உயர் தொடக்கநிலை வகுப்புக்கான ஆங்கில பயிற்சி: நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்
உயர் தொடக்கநிலை வகுப்புக்கான ஆங்கில பயிற்சி: நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்
உயர் தொடக்கநிலை வகுப்புக்கான ஆங்கில பயிற்சி: நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்
உயர் தொடக்கநிலை வகுப்புக்கான ஆங்கில பயிற்சி: நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நாமக்கல்: 'உயர் தொடக்கநிலை வகுப்புக்களுக்கான ஆங்கில பயிற்சி, நாமக்கல் மாவட்டத்தில் துவங்கியுள்ளது' என, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சி.இ.ஓ., விஸ்வநாதன், உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர் தொடக்க நிலை வகுப்புகளுக்கான ஆங்கிலப் பயிற்சி, மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் சார்பில், ஆங்கில ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மை கருத்தாளர் மூலம் மாவட்ட அளவில், 18 ஆங்கில ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆறு ஆங்கிலம் சாரா ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு திட்டமிடுதல் மற்றும் தயார் படுத்துதல் பணிமனை அனைவருக்கும் திட்ட இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. இப்பணிமனையில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார அளவில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை மற்றும் பயிற்சிக்கு தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்களையும் தயார் செய்தனர். மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற, 25 ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், ஒன்றிய அளவில், 6, 7, 8ம் வகுப்பு ஆங்கில பாடம் கற்பிக்கும் உயிர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அதில் முதல் கட்டமாக, கடந்த, 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, ஜூலை 26 முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கும், மூன்றாம் கட்டமாக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் ஆங்கிலப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்துக்கும், 35க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, புதுச்சத்திரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி, கபிலர்மலை ஆகிய, 10 ஒன்றியங்களில் இரண்டு கட்டமாகவும், கொல்லிமலை, சேந்தமங்கலம், எலச்சிபாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் முதற்கட்டமாகவும், திருச்செங்கோடு ஒன்றியத்தில் மூன்று கட்டங்களாகவும் நடக்கிறது. இப்பயிற்சியில், 830 உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.