ADDED : ஆக 22, 2011 11:25 PM
திருப்பூர் : 'வாட்' வரி உயர்த்தப்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதமாக மார்க்கெட்டில் அனைத்து எண்ணெய் ரகங்கள் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு டின் (15 கிலோ) கடலை எண்ணெய் ரூ.1,530; நல்லெண்ணெய் 1,260; விளக்கு எண்ணெய் 1,900; ரீபைண்ட் ஆயில் 1,650; பாமாயில் 950; சன் பிளவர் ஆயில் 1,230; தேங்காய் எண்ணெய் 1,470 ரூபாய் என டின்னுக்கு 30 முதல் 50 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது: கால நிலை மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தற்போது எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மூலமாகவே வெள்ளகோவில், காங்கயம், தேனி பகுதிகளில் இருந்து எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இருப்பு அதிகம் உள்ளதால், லாரி ஸ்டிரைக் பெரிய அளவில் எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கவில்லை. ஸ்டிரைக் நீடிக்கும் பட்சத்தில், அனைத்து எண்ணெய் ரகங்களும் இரு மடங்கு விலை உயரும் வாய்ப்புள்ளது, என்றனர்.


