வாக்காளர்களுக்கு கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்
வாக்காளர்களுக்கு கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்
வாக்காளர்களுக்கு கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்
ADDED : அக் 06, 2011 09:44 PM
தூத்துக்குடி : கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு கறிவிருந்து வழங்கியதாக தி.மு.க., வேட்பாளர் மீது கூறப்பட்ட புகார் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவில்பட்டி நகராட்சியில் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் முன்னாள் நகர செயலர் கருணாநிதி போட்டியிடுகிறார். நேற்று மதியம் இங்கு காந்திநகரில் இவரது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில், உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் 150 பேருக்கு, கருணாநிதி 'கறிவிருந்து' வழங்கியதாக புகார் வந்தது. இதையடுத்து மேற்கு போலீசார், வருவாய்துறையினர் அங்கு சென்றனர். ஆனால், அப்போது அங்கு கறிவிருந்து நடக்கவில்லை. அதுபோல, சாப்பாட்டு பாத்திரங்களும் அங்கில்லை. சேர்கள் மட்டுமே கிடந்தன. இதுகுறித்து, கருணாநிதியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.


