/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணக்குள விநாயகர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புமணக்குள விநாயகர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
மணக்குள விநாயகர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
மணக்குள விநாயகர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
மணக்குள விநாயகர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
ADDED : அக் 15, 2011 02:33 AM
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் கற்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
டாக்டர் ராஜாராம் வர வேற்றார். கல்லூரி நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்கண் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயிற்சி வகுப்பினை சாப்ட் ஸ்கில்ஸ் அகாடமி இயக்குனர்கள் கணேஷ், விஜய் வழிநடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமை பண்புகளை வளர்க்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தனர். நான்கு நாட்கள் நடந்த பயிற்சி வகுப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ஜெய்க்குமார் நன்றி கூறினார்.


