ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலையில், பாரத ஸ்டேட் பேங்க் சார்பில், வாகனக்கடன் மற்றும் வியாபாரக்கடன் லோன் மேளா நடந்தது.
உடுமலை, பூளவாடி, பூலாங்கிணறு, தேவனூர்புதூர், ஜல்லிபட்டி, அமராவதி நகர் கிளைகள் சார்பில் லோன் மேளா உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் வியாபாரக்கடன் கேட்டு 250க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அதில், விண்ணப்பங்களை பரிசீலித்து வங்கி அதிகாரிகள் 13 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு கடன் வழங்க முன்வந்துள்ளனர். உடுமலை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராமசுப்பிரமணியன், தனிநபர் பிரிவு மேலாளர் ஞானசெல்வம், குணசேகரன், பூலாங்கிணர் கிளை மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஜல்லிபட்டி கிளை மேலாளர் செல்வராஜ், அமராவதி கிளை மேலாளர் ராஜசேகரன், தேவனூர்புதூர் கிளை மேலாளர்கள் பங்கேற்றனர்.