/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/இன்று திருஓணம் : களைகட்டியது குமரி மாவட்டம் : கண்ணை கவரும் அத்தப்பூ கோலங்கள்இன்று திருஓணம் : களைகட்டியது குமரி மாவட்டம் : கண்ணை கவரும் அத்தப்பூ கோலங்கள்
இன்று திருஓணம் : களைகட்டியது குமரி மாவட்டம் : கண்ணை கவரும் அத்தப்பூ கோலங்கள்
இன்று திருஓணம் : களைகட்டியது குமரி மாவட்டம் : கண்ணை கவரும் அத்தப்பூ கோலங்கள்
இன்று திருஓணம் : களைகட்டியது குமரி மாவட்டம் : கண்ணை கவரும் அத்தப்பூ கோலங்கள்
மார்த்தாண்டம் : மலையாள மக்களின் வசந்த கால விழாவான திருஓணம் இன்று(9ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பஸ்களில் கூட்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், பாலா, பந்தனம்திட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கட்டுமான பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கேரளாவில் திருஓண விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர். இதை போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் கேரளானை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கு பிற்பகல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் பிற்பகல் 1.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலில் கூட்டம் பொதுவாக குறைவாகவே காணப்படும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் அலைமோதியது. இதை போல் காலை திருவனந்தபுரம் செல்லும் ரயில்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுகிறது. திருஓணம் முடிந்து அதாவது 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை, பெங்களூரூ செல்லும் தனியார் பஸ்களில் டிக்கெட் இல்லை. ரயில் டிக்கெட்டுகளும் ஏற்கனவே முடிந்து விட்டது.
விழாக்கோலம் : திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரை எங்கு பார்த்தாலும் விழா கோலம் பூண்டுள்ளது. பல வண்ணத்தில் அத்தப்பூ கோலம் போட்டுள்ளனர். வண்ண விளக்குகள் ஜோலிக்கிறது. இதனால் பாலராமபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மார்த்தாண்டம் வந்து சேர சுமார் இரண்டு மணி நேரம் ஆவதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். காய்கறி விலை உயர்வு கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். இதை போல் கேரள மக்களும் காய்கறிகள் வாங்க மார்த்தாண்டம் மார்க்கெட் வந்துள்னர். காய்கறிகள் வாகனங்களில் கேரளா கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பழங்கள் மற்றும் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக்கு நூறு ஏத்தன் பழம் 700 முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதை போல் நூறு செந்துழுவன் பழம் 600 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இருப்பினும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கடுமையான டிமெண்ட் உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.