/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் பெருமிதம்இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் பெருமிதம்
இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் பெருமிதம்
இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் பெருமிதம்
இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. : அமைச்சர் பெருமிதம்
கடையநல்லூர் : இலங்கை தமிழர்களை பாதுகாக்ககூடிய ஒரே இயக்கம் அதிமுக தான் எனவும், பொருளாதார தடையை இலங்கை அரசு மீது அமெரிக்கா விதித்திட முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் எனவும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-''தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தல் காலகட்டங்களிலும் திமுகவினர் இலங்கை தமிழர் பிரச்னையை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள பொருளாதார தடைக்கு காரணமாக திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதா தான்.இதன் காரணமாக தற்போது இந்தியாவில் மட்டுமின்றி அனைத்து உலக தலைவர்களின் பார்வையும் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையினை உற்றுப்பார்க்க வைத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர், கிலாரி கிளிண்டன் சந்திப்பிற்கு பிறகு கோவையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். திமுக தொடர்ந்து மேற்கொண்டு வரும் இலங்கை தமிழர் பிரச்னை கபட நாடகத்தை நம்பிட தமிழக மக்கள் தயாராக இல்லை.ஈழத்தமிழர் மீது போர்குற்றம் புரிந்து இலங்கை அரசு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை உலக அளவில் இலங்கை பிரச்னையை மேலும் உற்றுப்பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் நலன் காக்க முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்'' என்றார்.


