ADDED : ஜூலை 15, 2011 03:22 AM
எட்டயபுரம்:எட்டயபுரம் டவுன் பஞ்., பகுதியில் சுகாதாரப் பிரச்னைகளுக்கு
தீர்வு காண வலியுறுத்தி இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.எட்டயபுரம் டவுன் பஞ்சில் 14வது வார்டில் தேங்கி கிடக்கும்
வாறுகால் கழிவுகளை தோண்டி சுத்தப்படுத்த வேண்டும்.
பழுதடைந்த வாறுகாலை
செப்பனிட்டு சுகாதார பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தி இ.கம்யூ.,
ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ. 14வது வார்டு செயலாளர் கண்ணன் தலைமை
வகித்தார். நகரகுழு உறுப்பினர் முருகேஷ் துவக்கி வைத்தார். நகர செயலாளர்
குமரன் முன்னாள் டவுன் பஞ்., துணை தலைவர் காளி கண்ணையா, நகரகுழு
உறுப்பினர்கள் முனியசாமி, முனியராஜ், நாகராஜ் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். ஏ.ஐ.ஒய்.எப்., மாவட்ட செயலாளர் பாலமுருகன் முடித்து வைத்தார்.