சேவல் சண்டை நான்கு பேர் அதிரடி கைது
சேவல் சண்டை நான்கு பேர் அதிரடி கைது
சேவல் சண்டை நான்கு பேர் அதிரடி கைது
ADDED : ஜூலை 15, 2011 12:50 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நால்வரை, போலீஸார் கைது செய்தனர்.
ப.வேலூர் அருகே அரசம்பாளையத்தில் உள்ள பாழடைந்த வீட்டில், ஒரு கும்பல் பணம் வைத்து, சேவல் சண்டை நடத்தியது. தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று, பணம் வைத்து சூதாடிய இந்திரா நகரைச் சேர்ந்த நடேசன் (41), சக்திபாளையம் சீனிவாசன் (40), குமாரசாமி (49), நந்தக்குமார் ஆகிய நால்வரை கைது செய்தனர்.