/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
புதுப்பொலிவு பெறுகிறது போலீஸ் கவுன்சிலிங் வாகனம்
ADDED : செப் 07, 2011 10:38 PM
சிவகங்கை : கடந்த தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட போலீஸ் கவுன்சிலிங் வாகனம் 'டிவி' உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது.கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உடனே தடுக்கவும், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன் கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுன்சிலிங் நடத்த, வாகனம் வழங்கப்பட்டது.
இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர், வக்கீல்கள், கவுன்சிலிங் உறுப்பினர்கள் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தனர். அதற்கு பின் வந்த தி.மு.க., அரசு, இலவச போலீஸ் கவுன்சிலிங் வாகன திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், போலீஸ் கவுன்சிலிங் வாகனம் பொலிவிழந்து போனது.புதுப்பொலிவு: மீண்டும் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்வர் ஜெ., பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே நேரில் சென்று கவுன்சிலிங் நடத்துமாறும், இதற்காக வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தார். மாவட்டந்தோறும் வழங்கப்பட்ட 'போலீஸ் நடமாடும் கவுன்சிலிங்' வாகனத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதில், பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க, 'டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்காக புதிதாக 'டிவி' உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.