/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஈஷா அறக்கட்டளை சார்பில்சுகாதார விழிப்புணர்வு முகாம்ஈஷா அறக்கட்டளை சார்பில்சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஈஷா அறக்கட்டளை சார்பில்சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஈஷா அறக்கட்டளை சார்பில்சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஈஷா அறக்கட்டளை சார்பில்சுகாதார விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 12, 2011 03:17 AM
சேலம்: சேலம், மகுடஞ்சாவடியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், ஈஷா
அறக்கட்டளை சார்பில், இலவச சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) திருஞானம் துவக்கி வைத்தார். அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகானந்தம், கொங்கணாபுரம் வட்டார
வளமைய மேற்பார்வையாளர் மரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சுத்தம்,
சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு, மருத்துவப் பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள்
அளிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள்
பங்கேற்றனர். கிராமப் புத்துணர்வு இயக்கத்தின், ஆரோக்கிய அலைத்திட்ட சேலம்
மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி சங்கல்பா, முகாமிற்கான ஏற்பாடுகளை
செய்திருந்தார்.
செப்டம்பர் 30ம் தேதி, சேலம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில்
நடக்க உள்ள ஈஷா யோகா வகுப்பிற்கான அறிமுக விரிவாக்க உரையும் நடந்தது. இந்த
ஈஷா யோகா வகுப்பில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என
தெரிகிறது. மிகவும் பழமையான ஷாம்பவி மஹாமுத்திரா பயிற்சி வாழ்க்கையை
மாற்றியமைக்கக்கூடியது.அந்த பயிற்சியானது உடல் உறுப்புகளுக்கு பலன்
தரக்கூடியது. சத்குரு யோகப் பயிற்சி நேரடியாக கற்றுத்தரப்பட உள்ளது. மேலும்
விபரங்களுக்கு, 94425 - 90085 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.