Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை

திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை

திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை

திசையன்விளையில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2011 01:46 AM


Google News

திசையன்விளை : திசையன்விளை டவுன் பஞ்., பகுதியில் புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து ம.தி.மு.க.

ராதாபுரம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஆறுமுகநயினார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:திசையன்விளை டவுன் பஞ்.,சில் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மகப்பேறு உதவித் தொகை வேண்டுவோர், விவசாய கூலி, நலிந்தோர் உதவித் தொகை வேண்டுவோர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வி.ஏ.ஓ.விடம் சென்று சான்றுபெற வேண்டி உள்ளது.ஆனால் கிராம நிர்வாக அதிகாரியோ வறுமைக்கோட்டு பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என பார்த்து பஞ்., அலுவலகத்தில் வறுமைக்கோட்டு பட்டியல் சான்ழிதழ் வாங்கிவர சொல்கிறார்கள். ஆனால் டவுன் பஞ்., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டு பட்டியலில் தகுதி உள்ளோர் பெயர்கள் இல்லை.



இப்பட்டியலில் வசதி உள்ளவர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் உண்மையிலேயே குடியிருக்க வீடு இல்லாமல், உழைக்க தெம்பு இல்லாமல், ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் பெயர்கள் இல்லை.எனவே உண்மையிலேயே வறுமையில் வாடுவோருக்கு தற்போது உள்ள வறுமைக்கோட்டு பட்டியலினால் எந்த பயனும் இல்லை. வறுமைக்கோட்டு பட்டியலில் பெயர் இல்லாத ஏழைகள் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கும், ஆர்.ஐ.அலுவலகத்திற்கும், பஞ்., அலுவலகத்திற்கும் அலைக்கழிக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.எனவே இதனை கருத்தில் கொண்டு உண்மையான ஏழை பயனாளிகள் பயன்பெறும் பொருட்டு பழைய வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்து, புதுக்கணக்கெடுப்பினை நடத்தி ஆய்வு செய்து புதிய வறுமைக்கோட்டு பட்டியல் வெளியிட அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us