/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சபரிமலை சீசனில் குமரிக்கு இடம்பெயரும் யானைகள் குழித்துறை முகாமில் மாவட்ட வன அதிகாரி தகவல்சபரிமலை சீசனில் குமரிக்கு இடம்பெயரும் யானைகள் குழித்துறை முகாமில் மாவட்ட வன அதிகாரி தகவல்
சபரிமலை சீசனில் குமரிக்கு இடம்பெயரும் யானைகள் குழித்துறை முகாமில் மாவட்ட வன அதிகாரி தகவல்
சபரிமலை சீசனில் குமரிக்கு இடம்பெயரும் யானைகள் குழித்துறை முகாமில் மாவட்ட வன அதிகாரி தகவல்
சபரிமலை சீசனில் குமரிக்கு இடம்பெயரும் யானைகள் குழித்துறை முகாமில் மாவட்ட வன அதிகாரி தகவல்
ADDED : செப் 21, 2011 12:31 AM
மார்த்தாண்டம்:சபரிமலை சீசனில் கேரள யானைகள் குமரிக்கு வருகின்றன என
குழித்துறையில் நடந்த யானைகள் சிகிச்சை முகாமில் மாவட்ட வன அதிகாரி ரிட்டோ
சிரியாக் பேசினார்.தமிழ்நாடு யானைகள் நல சங்கம் மற்றும் குழித்துறை லயன்ஸ்
சங்கம் இணைந்து குழித்துறை வாவுபலி பொருட்காட்சி மைதானத்தில் யானைகள்
சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது. இதில் குமரி தேவசம்போர்டுக்கு சொந்தமான
குழித்துறை கோபாலன் யானை உட்பட ஒன்பது யானைகள் கலந்து கொண்டன.
முகாமை மாவட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாக் துவக்கி வைத்து
பேசியதாவது:கேரளாவில் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சிகிச்சை
அளிக்கப்படுகிறது. இதை போல் சிகிச்சை அளிப்பது நல்லது. தமிழகத்தில்
முதுமலையில் யானைகள் முகாம் உள்ளது. கேரளாவில் சபரிமலை சீசனில் யானைகள்
குமரி மாவட்ட வன பகுதிக்கு வருகிறது.ஆறுகாணி, பத்துகாணி அருகில் உள்ள
கிளமலை பகுதி வழியாக யானைகள் குமரி மாவட்டம் வருகிறது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிருகங்கள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 72
யானைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 சதவீதம்
காடுகள் உள்ளது.
காடுகளை ஒட்டிய கிராம பகுதிகளில் மிருகங்கள் ஊருக்குள் புகாமல் இருக்க
மின்வேலி போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலியில் காட்டு வள்ளி செடிகள்
படர்ந்து பழுதடைகிறது. வன விலங்குகளின் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில்
சூரிய மின்வேலி, யானைகள் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு அகளி போன்றவை
அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட வன
அதிகாரி ரிட்டோ சிரியாக் பேசினார்.லயன்ஸ் கால்நடை மருத்துவ பிரிவு மாவட்ட
தலைவரும், கால்நடை மருத்துவ நிபுணருமான டாக்டர் புரூஸ் தலைமை வகித்தார்.
சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் சிகிச்சை
அளித்தனர்.
குழித்துறை லயன்ஸ் சங்க தலைவர் விமல்குமார், செயலாளர் ஜிம்மிடேவிட்,
பொருளாளர் சகாப்தின், தொழிலதிபர்கள் ஜெயக்குமார், மோகன், லயன்ஸ் சங்க
நிர்வாகி தேவகுமார் சாமுவேல், மார்த்தாண்டம் சங்க நிர்வாகி ஜோசப் தயாசிங்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகள் யானைகள் நலசங்க
செயலாளர் பிரதீப்குமார், பொருளாளர் மோகன்தாஸ் தலைமையில்
செய்யப்பட்டிருந்தது.