ADDED : செப் 17, 2011 02:15 AM
பெருந்துறை: ஊத்துக்குளி, தில்லைக்குட்டை பாளையம் அங்கன்வாடி பணியாளர்
சவுத்திரியின், இரண்டரை பவுன் தாலிக்கொடியை, 2003ல் நான்கு பேர் கொண்ட
கும்பலம் பறித்து சென்றது.கோவை, சிங்காநல்லூர் அருள்முருகன் (23), கோவை,
சாஸ்திரி நகர் ஜெயகுமார் (24), வெள்ளிரவெளி வெள்ளியங்கிரி (32) ஆகியோருக்கு
தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.