/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குழந்தைகள் சிறப்பு மையத்தில் தீ விபத்துகுழந்தைகள் சிறப்பு மையத்தில் தீ விபத்து
குழந்தைகள் சிறப்பு மையத்தில் தீ விபத்து
குழந்தைகள் சிறப்பு மையத்தில் தீ விபத்து
குழந்தைகள் சிறப்பு மையத்தில் தீ விபத்து
ADDED : ஆக 29, 2011 01:01 AM
ஈரோடு: ஈரோட்டில் குழந்தைகள் நல சிறப்பு மையத்தில், நேற்று காலை ஏற்பட்ட
திடீர் தீ விபத்தால், அப்பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக காணப்பட்டது.
ஈரோடு சம்பத் நகரில் கலெக்டரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. அதன்
அருகில் செல்வலட்சுமி மருத்துவமனை எனும் தனியாரின் குழந்தைகள் சிறப்பு
மையம் அமைந்துள்ளது. இம்மையத்தின் பின்பக்கம், மூன்றாவது மாடியில், டாக்டர்
நிர்மலா பாலுவின் வீடு உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் மருத்துவமனையின்
மூன்றாவது தளத்தில் ஒரு பகுதியில் எக்ஸாஸ்ட் ஃபேன் வழியாக குபுகுபு வென
கரும்புகை வெளியானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மருத்துவமனையில் தீ
விபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறைக்கு தகவல்தெரிவித்தனர். ஈரோடு
தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், 5 மேற்பட்ட
தீயணைப்பு வீரர்களுடன் வாகனம் வந்தது. புகை வந்த மூன்றாவது தளத்துக்கு
சென்று பார்த்தபோது, அங்கிருந்த டாக்டரின் வீட்டு சமையல் கட்டில் இருந்த
நவீன சிம்னி சமையல் கூடத்தில் தீப்பிடித்ததும், சிம்னியில் ஒட்டியிருந்த
எண்ணெய் பிசுக்கு சேர்ந்து எரிந்ததால், எக்ஸாஸ்ட் ஃபேன் வழியாக கரும்புகை
வெளியேறியது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிம்னியில் பற்றிய
தீயை அணைத்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு பாதுகாப்புகள்
பற்றி ஆய்வு செய்து விட்டு திரும்பிச் சென்றனர். குழந்தைகள் நல மையத்தில்
இருந்து கரும்புகை வெளியானதால், அப்பகுதி மக்கள் சிறிது நேரம் அச்சத்தில்
இருந்தனர்.