/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது முதல்வர் ரங்கசாமி பேச்சுஅனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது முதல்வர் ரங்கசாமி பேச்சு
அனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது முதல்வர் ரங்கசாமி பேச்சு
அனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது முதல்வர் ரங்கசாமி பேச்சு
அனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது முதல்வர் ரங்கசாமி பேச்சு
ADDED : ஆக 01, 2011 02:38 AM
புதுச்சேரி : 'இப்போது அனைத்திற்கும் அரசியல் தேவையாகத் தான் உள்ளது' என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புலவர் நாகி எழுதிய 'நாடகக்கனிகள்' என்ற நூல் வெளியீட்டு விழா கவுண்டம்பாளையம் முத்துரத்தின அரங்கம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.பேராசிரியர் ராஜன் வரவேற்றார். தமிழ்மாமணி அரிமதி தென்னகனார் தலைமை தாங்கினார். சீனு ராமச்சந்திரன், ஆதிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனு வேணுகோபால் நூல் அறிமுகவுரையாற்றினார். நூலை வெளியிட்டு முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புலவர்கள் வயது முதிர்ச்சி அடைந்தாலும் உள்ளத்தில் அவர்கள் இளமையாக இருக்க வேண்டும் என இயக்குனர் முத்துராமன் கூறியது சரியான கருத்து. முதியவர்களாக இருந்தாலும் ஒரு நம்பிக்கையுடன் அவர்கள் இருக்க வேண்டும். நல்ல நாடகக் கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழை வளர்க்க இது போன்ற நூல்களும் நல்ல நாடக கலைஞர்களும் தேவை. இந்த நூலின் கடைசியில் அரசியல் தேவையா இல்லையா என்ற பகுதி இருந்தது. முடிவு என்ன என்பதைப் பார்க்க எனக்கு ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் தேவை என்றோ, தேவையில்லை என்றோ நூலில் கூறவில்லை. ஆனால் இப்போது அனைத்திற்கும் அரசியல் தேவையாகத்தான் உள்ளது. தமிழக அரசின் பரிசுகளைப் புதுச்சேரி புலவர்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு முதல்வர் கூறினார்.முதல்வர் நூலை வெளியிட திரைப்பட இயக்குனர் முத்துராமன் பெற்றுக் கொண்டார். ஜனார்த்தனன், விழுப்புரம் தமிழ்ச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம், நடராசன், இலக்கியன், வேலவதாசன், பூங்கொடி பராங்குசம், தேவகி ஆனந்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாகி ஏற்புரையாற்றினார்.ராமதாஸ்காந்தி நன்றி கூறினார்.