/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனு தாக்கல் ஏற்பாடுகள் மாநகராட்சியில் குறைவு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பதில் குளறுபடி?மனு தாக்கல் ஏற்பாடுகள் மாநகராட்சியில் குறைவு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பதில் குளறுபடி?
மனு தாக்கல் ஏற்பாடுகள் மாநகராட்சியில் குறைவு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பதில் குளறுபடி?
மனு தாக்கல் ஏற்பாடுகள் மாநகராட்சியில் குறைவு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பதில் குளறுபடி?
மனு தாக்கல் ஏற்பாடுகள் மாநகராட்சியில் குறைவு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பதில் குளறுபடி?
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய, போதுமான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால், தேர்தல் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுமா? என்ற சந்தேகமெழுந்துள்ளது.
வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் அலுவலகத்துக்குள் செல்வதை கண்காணிக்கவும், அதிகமாகமானோர் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கும் ஒரே வளாகத்தில் மனுத்தாக்கல் அதிகாரிகள் இருப்பதால், எப்போது அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால், வரி உள்ளிட்ட வழக்கமான பணிகளுக்காக வரும் பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க முன்னேற்பாடு இல்லை. இதுபோல பல வழிகளிலும் தேர்தல் விதிமீறல் நடக்க வழிவகுப்பதாகவே, தற்போதைய மாநகராட்சி அலுவலக சூழல் அமைந்துள்ளது.
* போலீஸூக்கு என்ன வேலை?: மாநகராட்சி அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் நேற்று மனுத்தாக்கல் செய்த போது, தேர்தல் நடத்தும் அதிகாரி அறையில், தனிப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மோகன் மஃடியிலும், பெண் எஸ்.ஐ., கோமதி யூனிஃபார்மிலும் நின்று கொண்டிருந்தனர். வேட்பாளர் வரும் வரை, எஸ்.ஐ., கோமதி மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியிலும், எஸ்.ஐ., மோகன் வெளியில் நின்று நடப்பவைகளை கண்காணித்தும் கொண்டிருந்தனர்.
வேட்பாளர் வந்தவுடன், இருவரும் அறைக்குள் வந்து நின்று கொண்டனர். தேர்தல் விதிமுறையை மீறி வேட்பாளருடன், அதிகளவில் கட்சியினர் நிற்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் பிரிவு அதிகாரிகளும் இதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாநகராட்சி வளாகத்தில் திரண்டிருந்த கூட்டத்துக்கு ஏற்ப போதுமான போலீஸார் இல்லை. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறினார். அவர்கள் எங்கே போயினர்?