/உள்ளூர் செய்திகள்/தேனி/திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்புதிருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 08, 2011 10:46 PM
தேனி : திருமண உதவி திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈ.வே.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தில் நிதி உதவி பெற,திருமணத்தன்று 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, தொலைதூர கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். விதவை உதவித்தொகை பெறுபவர்கள் வருமான சான்று இணைக்க வேண்டியதில்லை. தாசில்தாரிடம் இருந்து பெற்ற விதவை சான்று சமர்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் விதவைச்சான்று, கல்விச்சான்று நகல், வயதுச்சான்று, வருமான சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை வழங்கி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.