/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் நகராட்சிசேர்மன் பதவிக்கு12 பேர் வேட்புமனுநாமக்கல் நகராட்சிசேர்மன் பதவிக்கு12 பேர் வேட்புமனு
நாமக்கல் நகராட்சிசேர்மன் பதவிக்கு12 பேர் வேட்புமனு
நாமக்கல் நகராட்சிசேர்மன் பதவிக்கு12 பேர் வேட்புமனு
நாமக்கல் நகராட்சிசேர்மன் பதவிக்கு12 பேர் வேட்புமனு
ADDED : செப் 30, 2011 01:40 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி சேர்மன் பதவிக்கு, 12 பேர் மற்றும், 39
கவுன்சிலர் பதவிக்கு, 313 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.நாமக்கல்
நகராட்சியில், மொத்தம், 39 வார்டுகள் உள்ளன.
நகராட்சி சேர்மன்,
கவுன்சிலர்களுக்கான வேட்புமனு தாக்கல், நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி
நாளான நேற்று, ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.அதன்படி, சேர்மன்
பதவிக்கு அ.தி.மு.க., சார்பில், கரிகாலன், தி.மு.க., சார்பில், செல்வராஜ்,
காங்கிரஸ் சார்பில், வாசு, தே.மு.தி.க., சார்பில், வேலு மற்றும்
சுயேட்சைகள் உட்பட மொத்தம், 12 பேர் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர்.அதுபோல், 39 நகராட்சிக் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,
தி.மு.க., தே.மு.தி.க., மற்றும் சுயேட்சைகள் உட்பட, 313 வேட்பாளர்கள்
மனுதாக்கல் செய்துள்ளனர்.