/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் சிந்தனையாளர் பேரவை கோரிக்கைநெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் சிந்தனையாளர் பேரவை கோரிக்கை
ADDED : செப் 20, 2011 10:43 PM
புதுச்சேரி : பதினைந்து கிலோ இலவச அரிசியை உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிந்தனையாளர் பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின் சிறப்பு கூட்டம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடந்தது. தமிழ்மாமணி மன்னர்மன்னன் தலைமை தாங்கினார். விக்டர் நிக்கோலஸ் வரவேற்றார். வனஜா வைத்தியநாதன், டைனமிக் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஜிப்மர் ரத்த வங்கி கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுப்பையா, பேரவை செயலாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மழைக்காலம் வருவதால் கழிவு நீர் வாய்க்கால் களில் தூர்வாரும் பணியை நகராட்சி துரிதப்படுத்த வேண்டும், அரசு அறிவித்த 15 கிலோ இலவச அரிசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரப்பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதைத் தடை செய்ய வேண்டும். வாகன நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், அரும்பார்த்தபுரத்திலிருந்து நூறடி சாலை வரை புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவை துணைச்செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


