/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காரிமங்கலத்தில் இன்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்புகாரிமங்கலத்தில் இன்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
காரிமங்கலத்தில் இன்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
காரிமங்கலத்தில் இன்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
காரிமங்கலத்தில் இன்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
ADDED : செப் 12, 2011 02:22 AM
காரிமங்கலம்:காரிமங்கலத்தில், வெண்கலத்தினால் ஆன எம்.ஜி.ஆர்., முழு
உருவச்சிலையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இன்று
திறந்து வைக்கிறார்.காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் முன், அமைக்கப்பட்டிருந்த
எம்.ஜி.ஆர்., சிலை பழுதடைந்த நிலையில், புதிய சிலை வைக்க மாவட்ட
அ.தி.மு.க., சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முந்தைய தி.மு.க., அரசிடம்
மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில்
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் புதிய சிலையை அமைக்க அனுமதி
வழங்கப்பட்டது. இதையடுத்து, வெண்கலத்திலான எம்.ஜி.ஆர்., முழு உருவ சிலை
வைக்கப்பட்டு, பீடம் சீரமைக்கப்பட்டுள்ளது.இச் சிலையை, தமிழக முதல்வரும்
அ.தி.மு.க., பொதுச் செயலாருமான ஜெயலலிதா, இன்று காலை வீடியோ கான்ஃபரன்ஸிங்
மூலம் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ.,
அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் கேட்டுகொண்டுள்ளனர்.