நாம் தமிழர் கட்சி டிபாசிட் பறிபோனது
நாம் தமிழர் கட்சி டிபாசிட் பறிபோனது
நாம் தமிழர் கட்சி டிபாசிட் பறிபோனது
UPDATED : ஜூலை 13, 2024 02:42 PM
ADDED : ஜூலை 13, 2024 11:49 AM

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டிபாசிட் ஐ இழந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,479 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
ஒரு தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (ஜூலை 13) நடந்தது. இத்தேர்தலை அதிமுக., புறக்கணித்ததால் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நாம் தமிழர் கட்சிக்கு, அவர்கள் ஓட்டுப் போடுவார்களா அல்லது போடமாட்டார்களா என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா சொற்ப ஓட்டுகளே பெற்று இருந்தார். மொத்தமாக, அவர் 10,479 ஓட்டுகளை பெற்றார். தேர்தலில் பதிவான ஓட்டுக்களில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை நாம் தமிழர் கட்சி பெறாததால் டிபாசிட் ஐ இழந்தது.