‛காங்., செய்த தவறுகளை செய்தால்....' : பா.ஜ.,வினரை எச்சரிக்கும் கட்கரி
‛காங்., செய்த தவறுகளை செய்தால்....' : பா.ஜ.,வினரை எச்சரிக்கும் கட்கரி
‛காங்., செய்த தவறுகளை செய்தால்....' : பா.ஜ.,வினரை எச்சரிக்கும் கட்கரி
ADDED : ஜூலை 13, 2024 12:00 PM

பனாஜி: காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்தால், அக்கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியதற்கும், நாம் ஆட்சி அமைத்ததற்கும் எந்த பலனும் இருக்காது'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கோவா மாநில செயற்குழு கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது: பா.ஜ., என்பது வித்தியாசமான கட்சி என அத்வானி கூறுவார். மற்ற கட்சிகளிடம் இருந்து நாம் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தவறு செய்த காரணத்தினால் தான் பா.ஜ.,வை மக்கள் தேர்வு செய்தனர்.
நாமும் அதே தவறை செய்தால், அவர்கள் வெளியேறியதற்கும், நாம் வெற்றி பெற்றதற்கும் எந்த பலனும் இல்லாமல் போய் விடும். வரும் நாட்கள் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கான கருவிதான் அரசியல் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிக்க வேண்டும்.
ஜாதி ரீதியில் அரசியல் செய்வதை பின்பற்றக்கூடாது என நான் முடிவு செய்துள்ளேன். அந்த அரசியல் செய்ய மாட்டேன் என மக்களிடம் கூறியுள்ளேன். அப்படி செய்தால் அதிகாரத்தில் இருந்து வெறியேறிவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.