செஞ்சி:வாலிபரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது.செஞ்சி தாலுகா
சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஏழுமலை, 23. இவர்
செஞ்சியில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 7ம் தேதி
காலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
இவரது அண்ணன் கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.