/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ஷட்டரை உடைத்து நகைகடையில் திருட்டு : 3பவுன் தங்கம், 9கிலோ வெள்ளிகொள்ளைஷட்டரை உடைத்து நகைகடையில் திருட்டு : 3பவுன் தங்கம், 9கிலோ வெள்ளிகொள்ளை
ஷட்டரை உடைத்து நகைகடையில் திருட்டு : 3பவுன் தங்கம், 9கிலோ வெள்ளிகொள்ளை
ஷட்டரை உடைத்து நகைகடையில் திருட்டு : 3பவுன் தங்கம், 9கிலோ வெள்ளிகொள்ளை
ஷட்டரை உடைத்து நகைகடையில் திருட்டு : 3பவுன் தங்கம், 9கிலோ வெள்ளிகொள்ளை
ADDED : செப் 01, 2011 11:43 PM
ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி ஜங்சன் அருகே நகைகடை ஷட்டர் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள் ரூ 6லட்சம் பெறுமான தங்க, வெள்ளிநகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
ஆரல்வாய்மொழி ஜங்சன் அருகே பகவதிஜூவல்லர்ஸ் நகைகடை உள்ளது. இந்த கடையில் வெள்ளி, தங்க நகைகள் செய்து கொடுத்து வந்தனர். கடையை வடக்கூர் பகுதியை சேர்ந்த ஐய்யப்பன்மகன் செந்தில்குமார்(36) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை அப்பகுதி மக்கள் சிலர் செந்தில்குமாருக்கு தொலைபேசி மூலம் உங்கள் கடை திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செந்தில்குமார் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டரில் பூட்டி இருந்த இரு பூட்டுகளும் கடப்பாறை கம்பியால் நெம்பி திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரொக்கபணம் ரூ ஆயிரத்து500, மூன்று பவுன் தங்கநகைகளும், 9கிலோ வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதன் மதிப்பு ரூ 6 லட்சம் ஆகும். இது குறித்து அவர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி., அருண், டி.எஸ்.பி., பாஸ்கரன், போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவஇடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் ஷெர்லாக் வரவழைக்கப்பட்டது. அது சுமார் ஒரு கிலோமீட்டர் ஓடி சென்று பெட்ரோல் பங்க் பக்கம் நின்றுவிட்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. அதுபோன்று கைரேகை நிபுணர்களும் வந்து பதிந்து இருந்த கைரேகையை பதிவு செய்தனர். இந்த கடைக்கு அருகே உள்ள டெய்லரின் கடை பூட்டையும் கொள்ளையர்கள் கடப்பாறை கம்பியால் உடைக்கமுயன்று, முடியாமல் கடப்பாறை கம்பியை கடை வாசலில் விட்டு சென்றுள்ளனர். ஆரல்வாய்மொழி பஜாரில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. மேலும் இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் வர்த்தகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித பீதியை ஏற்படுத்திஉள்ளது.