/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்கம்புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்கம்
புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்கம்
புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்கம்
புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்கம்
ADDED : செப் 12, 2011 03:48 AM
மோகனூர்: மோகனூர்- நாமக்கல் வழித்தடத்தில், புதிய பஸ் போக்குவரத்து துவக்க
விழா, மோகனூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
கோட்ட மேலாளர் குமார் தலைமை வகித்தார். கிளை மேலாளர் ராமசாமி, அ.தி.மு.க.,
நகரச் செயலாளர் பாலு, ஒன்றியச் செயலாளர் சிவசாமி, தொகுதி செயலாளர் மயில்
சுந்தரம், இணைச் செயலாளர் தென்னரசு, மாவட்ட பாசறை செயலாளர் நமேஸ் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ., பாஸ்கர், புதிய பஸ் போக்குவரத்தை
கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர்
காந்திமுருகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்ல ராஜாமணி,
முன்னாள் ஒன்றியச் செயலாளர் வக்கீல் வேலு ராஜாமணி, வக்கீல் சண்முகம்,
தே.மு. தி.க., மாவட்ட துணைச் செயலாளர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
106 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்நாமக்கல்: ''கல்விக்கடன் வழங்கும்
முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான, 106 பேருக்கு கல்விக்கடன்
வழங்கப்பட்டுள்ளது,'' என, முகாமில் கலெக்டர் குமரகுருபரன்
கூறினார்.நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்டத்தை
சேர்ந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் வழங்கும்
முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் குமரகுருபரன் ஆய்வு செய்து பின்
கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, நாமக்கல், கொல்லிமலை
ஆகிய மூன்று இடங்களில் கல்லூரியில் பயிலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த
மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே
நடத்தப்பட்டுள்ளது.இம்முகாமில் கல்விக்கடன் கோரும், 3,001 விண்ணப்பங்கள்
பெறப்பட்டது. இவ்விண்ணப்பங்கள் அனைத்தும், 22 வங்கிகள் மூலம் நடவடிக்கை
எடுக்க மேற்கொள்ளப்பட்டது. 298 மாணவ, மாணவியருக்கு கல்விக்கடன் வழங்க
அனுமதிக்கப்பட்டுள்ளது.அதில், 106 பேருக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
307 மாணவர்களின் விண்ணப்பங்கள், மண்டல வங்கி அலுவலகத்தில் அனுமதிக்காக
அனுப்பப்பட்டுள்ளது. 124 விண்ணப்பங்கள் தகுதியின்மை காரணமாக தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்விக்கடன் கோரும் விண்ணப்பங்கள், வங்கிகள்
மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
நடக்கும் நான்காவது கல்விக்கடன் வழங்கும் முகாமில், கல்லூரியில் படிக்கும்
மாணவ, மாணவியர் கல்விக்கடன் பெறுவதற்கு தகுதியான படிப்புகள், தகுதியுடைய
செலவுகள், நிதியுதவியின் அளவு, கடன் பெறுபவரின் பங்குத்தொகை, உத்தரவாத
உச்சவரம்பு, கடனை திருப்பி செலுத்துவதற்காக கால அவகாசம், வட்டி சதவீதம்,
செயலாக்க கட்டணம், கடன் நிலுவை இல்லாச் சான்று, சமர்ப்பிக்க வேண்டிய
ஆவணங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.தற்போது
நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில், 1,350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளது. இந்த முகாமில், 30 வங்கியாளர்கள் பங்கேற்றனர். முகாமில்
பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு,
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., பாஸ்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.