Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : ஆக 15, 2011 12:00 AM


Google News

நாவல் மரமும், கட்டட விரிசலும்



நாவல் பழ சீசன் நடைபெறுகிறது.

ஆனால் அறிவியல் பூர்வமாக வீட்டின் அருகே வளர்க்கக் கூடாத மரமாக, நாவல் மரம் உள்ளது.நாவல் மரத்தின் தூர்ப்பகுதி அகன்று அடர்த்தியாக இருப்பதால், இதன் வேர்கள் சுவர் களில் வெடிப்பை ஏற்படுத்தும். நாவல் மரத்தின் கிளைகள் மென்மையாக இருக்கும். தற்போது காற்றடிக்கும் மாதங்களில் உடைந்து விழுந்து, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தது ஆகும். எனவே வீடுகள், கட்டடங்களுக்கு அருகில் வளர்க்க நாவல் மரங்கள் ஏற்றதல்ல. தோப்புகள், காடுகளில் நாவல் மரங்களை வளர்க்க வேண்டும்.நாவல் மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், காற்றில் உள்ள ஈரத் தன்மையை எடுத்துக் கொள்கின்றன. மேகக் கூட்டங்களை ஈர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளன. பருவ மழை பொய்த்து விடாமல் இருக்க, நாவல் மரங்கள் அவசியமானதாகும்.



தகவல் சுரங்கம்



ஆகாகான் அரண்மனை



புனேயில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று ஆகாகான் அரண்மனையாகும்.இந்த ஆகாகான் அரண்மனை, சர் சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகாகானால் கட்டப் பட்டது. புனேயில் புகழ் பெற்ற எரவாடா சிறைப் பகுதியின் அருகில் ஆகாகான் அரண்மனை உள்ளது. பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, இந்த ஆகாகான் அரண்மனை கட்டப்பட்டது. ஆகாகானின் வாரிசுகள் 1969ல் இந்திய அரசுக்கு அரண்மனையை ஒப்படைத்தனர். இந்த ஆகாகான் அரண்மனையில் தான் காந்தியடிகள் சிறை வைக்கப்பட்டிருந்தார். 1943 ஆகஸ்ட் 15ல் மாரடைப்பால் மரணம் அடைந்த காந்தியடிகளின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாயின் சமாதியும், கஸ்தூரிபாவின் சமாதியும் ஆகாகான் அரண்மனையில் உள்ளது. ஆகாகான் அரண்மனையில் தற்போது மியூசியம் இயங்குகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us