ADDED : செப் 21, 2011 11:28 PM
விருதுநகர் : விருதுநகர் லாட்ஜில் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்த சித்த வைத்தியர் மகேந்திரன்,45, பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டிலுள்ள தனியார் லாட்ஜில், கடந்த ஆக.
26 ல், விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த சித்த வைத்தியர் மகேந்திரன் தங்கியிருந்தார். இவருடன் சென்னையை சேர்ந்த சேவியர் நந்திதாசன், மகன் தீபன் சந்திப்,21. ( மனநிலை பாதிக்கப்பட்டவர்) தங்கியிருந்தனர். காலையில் மகேந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். எப்படி இறந்தார் என்பது குறித்து காரணம் தெரியவில்லை. இது குறித்து மனைவி ராமலெட்சுமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். விருதுநகர் ஆஸ்பத்திரியில், இறந்த மகேந்திரனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக,' அறிக்கை கொடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் 'கொலை' வழக்காக மாற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.