PUBLISHED ON : ஆக 06, 2011 12:00 AM
ஆகஸ்ட்-'ஆட்டு சீஸ் மாதம்'
சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டியின் உபயோகம் ஐரோப்பிய நாடுகளை விட, இந்தியாவில் குறைவாக உள்ளது. வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங் களிலும் தான் சீஸைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் சீஸ் பசு, எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். ஆட்டின் பாலில் இருந்தும் சீஸ் தயாரிக்கலாம். அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்தை 'ஆட்டு சீஸ்' மாதமாக அறிவித்து கொண்டாடுகின்றனர். ஆட்டுப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸ் அதிகமாக இந்த மாதத்தில் பயன்படுத்தப்படும். ஆட்டு சீஸைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கான போட்டியும் நடைபெறும். பசுவின் பாலிலும், ஆட்டுப்பாலிலும் கொழுப்பின் அளவு சமமாகவே உள்ளது. ஆட்டுப்பாலில் காப்ரிலிக் மற்றும் காப்ரிக் அமிலங்கள் உள்ளன. பசும்பாலை விட, ஆட்டுப் பாலில் சீஸ் தயாரிப்பது எளிதாகும்.
தகவல் சுரங்கம்
ஐரோப்பாவிற்கு விடுமுறை
ஐரோப்பாவிற்கு விடுமுறை
ஐரோப்பாவில் ஜூலையும், ஆகஸ்ட்டும் பெரும்பாலான நாடுகளில் கோடைகாலமாக உள்ளது. இந்த மாதங்களில் ஐரோப்பாவில் விடுமுறைக் காலம் அறிவிக்கப்படுகிறது. குளிர், மழை என இருக்கும் ஐரோப்பாவில் ஜூலை, ஆகஸ்டில் தான் வெயில் அடிக்கிறது. இந்தியாவைப் போன்று கோடை காலம் கடுமையாக இருப்பதில்லை. ஆதலால் பெரிய அலுவலகங்கள், கடைகள் ஜூலை, ஆகஸ்டில் விடுமுறைக்காக மூடப்படுகின்றன. பாரீஸ் நகரில் இருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் சுற்றுலாவிற்கென வெளியேறுகின்றனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரீசிற்கு வருகை தருகின்றனர். கோடை விடுமுறையின் கூட்டத்தைக் காண்பிக்க 'டிவி'க்களில் தனி சிறப்பு நிகழ்ச்சிகள் காட்டப் படுகின்றன. கோடை விடுமுறைக்கென அனைத்து ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும், தங்கள் பணியாளர்களுக்கு கூப்பன்களையும், சிறப்புக் கடன்களையும் வாரி வழங்குகின்றன.