/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் :சாமை உற்பத்தியை பெருக்க நடவடிக்கைஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் :சாமை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
ஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் :சாமை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
ஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் :சாமை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
ஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் :சாமை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
ADDED : ஆக 07, 2011 01:46 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சாமை உற்பத்தியை பெருக்க தீவிர சிறு தானியங்கள் முன்னேற்ற மூலம் ஊட்ட சத்து பாதுகாப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வந்த குறுதானிய பயிர்களான கேழ்வரகு சாமை தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகிய பயிர்களின் சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. பண்டைய காலத்தில் இருந்து குறுதானியங்கள் முக்கிய உணவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சியில் குறுதானியங்களின் பயன்பாடு நகர்புற மக்களிடம் மட்டும் அல்லாமல் கிராம பகுதி மக்களிடையே மகிவும் குறைந்து விட்டது. குறுதானிய பயிர்களில் நமது உடலுக்கு தேவையான மாவு சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள், செரிமானத்துக்கு உதவும் நார்சத்துக்கள் போன்ற பல சத்துக்கள் அதிக அளவு உள்ளது. அத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன, குறுதானிய பயிர்களில் அரிசி, கோதுமைக்கு இணையான புரதம், மாவு சத்துக்களும் உள்ளதுடன் அதிக அளவில் தாது உப்புகளும், நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. குறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு பெரிதும் உதவுவதுடன் மலச்சிக்கலை தவிர்க்கவும், இதய நோய்கள், சர்க்கரை நோய்களை கட்டுக்குள் வைப்பதுடன் குடல் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் நச்சு தன்மை உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. குறு தானியங்களில் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பதால், நீண்ட நாட்களுக்கு நல்ல தரமான அளவு அதிக பாலை கொடுக்கும். குறு தானியங்கள் பறவைகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. குறு தானிய பயிர்களான சாமை, தினை, பனி வரகு, குதிரைவாலி ஆகியவை குறைந்த வயதில் வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலை தாங்கி வளர்ந்து மகசூல் தரவல்லது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். தர்மபுரி மாவட்த்தில் 70,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சாமை பரப்பளவு கடந்த ஐந்தாண்டுகளில் 43,500 ஏக்கரில் தான் சாகுபடி செய்யப்படுகிறது. சாமை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க நடப்பு ஆண்டில் 'இன்சிம்ப்' திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயிருக்கு உகந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்து செயல் விளக்கத்திடல்கள் மூலம் உற்பத்தியை அதிகரித்தல் அறுவடைக்கு பின் தொழில் நுட்பங்களை கடைபிடித்தல், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், சாமையினால் செய்யப்படும் உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டினை தவிரக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்தில் 1,000 ஏக்கர் வீதம் 8,000 ஏக்கரில் நடப்பு ஆண்டில் சாமை செயல்விளக்க திடல் அமைக்கப்படுகிறது. செயல்விளக்க திடலுக்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் ஏக்கருக்கு 800 ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சித்தேரியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் லில்லி துவக்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு இலவச இடு பொருட்களை வழங்கினார். சிறு தானியங்களில் சான்று விதை உற்பத்தி செய்யும் நோக்கில் ராகி விதை 20.0 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ராகி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 10 ரூபாய் வீதம் 2 லட்ச ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.