Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பஸ் - டூவீலர் மோதல் : 2 பேர் பலி

பஸ் - டூவீலர் மோதல் : 2 பேர் பலி

பஸ் - டூவீலர் மோதல் : 2 பேர் பலி

பஸ் - டூவீலர் மோதல் : 2 பேர் பலி

ADDED : செப் 23, 2011 08:41 PM


Google News
திருநெல்வேலி: மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது அரசு பஸ் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள வெள்ளங்குழி வடக்குத்தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(46). அங்குள்ள அரசு பள்ளியில் இரவுக் காவலராக பணியாற்றிவந்தார். இவரது நண்பர் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சக்திவேல்(49). இவர் அம்பாசமுத்திரத்தில் இருந்து நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வெள்ளங்குழி வந்தார். வண்டியின் பின்சீட்டில் முத்துராமலிங்கம் அமர்ந்திருந்தார். மாலை 5.30 மணியளவில் சேரன்மகாதேவி-அம்பாசமுத்திரம் ரோட்டில் வெள்ளங்குழி பாலத்தில் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தனர். எதிரே, நாகர்கோவிலில் இருந்து சேர்வலாறு சென்ற அரசு பஸ் எவ்வளவோ இடதுஓரமாக சென்றாலும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சுக்குள் சிக்கி இருவரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து அரசு பஸ் டிரைவர் நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த தர்மநாராயணனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us