/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாயக்கழிவுநீரை இத்தாலி தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிக்கலாம்சாயக்கழிவுநீரை இத்தாலி தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிக்கலாம்
சாயக்கழிவுநீரை இத்தாலி தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிக்கலாம்
சாயக்கழிவுநீரை இத்தாலி தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிக்கலாம்
சாயக்கழிவுநீரை இத்தாலி தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிக்கலாம்
திருப்பூர் : விறகு, கூடுதல் மின்சார பயன்பாடு இல்லாமல், லிட்டருக்கு 15 பைசா செலவில், இத்தாலி தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீரை 100 சதவீத 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு செய்யலாம் என, தொழில்நுட்ப சேவை மைய நிறுவனர் கூறினார்.இத்தாலி தொழில்நுட்ப சுத்திகரிப்பு நிபுணர் சில்வானோ ஸ்டோர்டி, திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூரில் அமைக்கப்பட்ட 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், கழிவுநீரை ஆவியாக்கும் பிரிவுகளில் பின்னடைவு ஏற்பட்டது.
'எவாப்ரேட்டர்' மூலம் ஆவியாக்கி சுத்திகரிப்பு செய்ய வேண்டும் எனில், ஒரு லிட்டர் கழிவுநீருக்கு 22 முதல் 27 பைசா செலவாகிறது; தினமும் 1,500 டன் விறகு எரிக்க வேண்டும். இத்தாலி தொழில்நுட்பத்தில், கடந்த 35 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பம் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் பின்பற்றப்படுகிறது.'வாட்டர் ட்ரீட்மென்ட் டெக்னாலஜி' என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், விறகு தேவையில்லை; மரங்களை அழிக்க வேண்டியதில்லை; மின்சாரம் அதிக அளவு தேவைப்படாது. திருப்பூரில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் இத்தொழில்நுட்பத்தை அமலாக்க முடியும். அதிக பொருட்செலவு தேவையில்லாததால், லிட்டர் 15 பைசா என்ற கட்டணத்தில் சுத்திகரிக்க முடியும்.கழிவுநீரை தனியாகவும், உப்பை தனியாகவும் பிரித்து வழங்க முடியும். இத்தொழில்நுட்பத்தில், 'ஆர்.ஓ.,' சுத்திகரிப்பிற்கு பிறகு, 90 சதவீத தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். மீதியுள்ள 10 சதவீத கழிவுநீரில் உள்ள 6 சதவீத உப்புத்தன்மையும் 'நானோ பில்ட்ரேஷன்' மூலம் பிரித்தெடுக்கப்படும்.
பிரித்து எடுக்கப்படும் உப்பை மீண்டும் பயன்படுத்தலாம், எஞ்சியுள்ள நான்கு சதவீத கழிவில் உள்ள 'ஆக்ஸிடேஷன்' தொழில்நுட்பத்தில், கடின தன்மைகளை உடைத்து, மீண்டும் 'பயாலஜிகல்' முறையில் சுத்திகரிப்பு செய்ய அனுப்பப்படுகிறது. இதன்மூலம், பனியன் துணிக்கு சாயமிடுவதில், கிலோவுக்கு ஐந்து ரூபாயை சேமிக்க முடியும். குறைந்த இயக்க செலவில், 100 சதவீதம் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடியும்.திருப்பூரின் மொத்த கழிவுநீரை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக சுத்திகரிப்பு செய்யும் சீனா சுத்திகரிப்பு ஆலைகளில் இத்தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறது. சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், ஐரோப்பா, இந்தோனேஷியா, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், மெக்ஸிகோ, பிரேசில் என பல நாடுகளில் இத்தொழில்நுட்பம் இன்றும் நடைமுறையில் உள்ளது என்றார்.


