Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

UPDATED : ஜூலை 24, 2011 11:06 PMADDED : ஜூலை 24, 2011 10:00 PM


Google News
Latest Tamil News

கோவை : தி.மு.க.,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பெயரை பலர் பொதுக்குழுவில் பரிந்துரைத்தனர்.

இதைக் கேட்ட அழகிரி, 'அப்செட்' ஆனார். மதிய உணவுக்கு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற அவர், பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார். நேற்று காலை நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முன்னாள் எம்.பி., ராமநாதன் பேசினார். அப்போது கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர், '1962 முதல் கட்சியில் இருந்து சம்பத், 1972ல் எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வைகோ பிரிந்து சென்று விட்டனர். இது போல் தி.மு.க., எத்தனையோ இழப்புகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். நமக்கு வயதாகி விட்டது. நமக்குப் பின்னும் கட்சி இருக்க வேண்டும். உங்களுக்குப் பின் கட்சிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்,'' என பேசினார்.

உடனே பிற உறுப்பினர்கள், 'தளபதி, தளபதி' என கோஷமிட்டனர். இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காத கருணாநிதி, 'மதிய உணவுக்குப் பின் கூட்டம் தொடரும்' என அறிவித்து எழுந்தார்.

மாலை 4.00 மணிக்கு மீண்டும் கூட்டம் துவங்கிய போது அழகிரி பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கிக்கொண்டார். மாலை 5.30 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்ட அழகிரி, பொதுக்குழு அரங்குக்கு செல்லவில்லை; 'அவர் மதுரைக்கு செல்வதாக' அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us