/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலைகளைச் செப்பனிட வேண்டும் : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்சாலைகளைச் செப்பனிட வேண்டும் : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
சாலைகளைச் செப்பனிட வேண்டும் : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
சாலைகளைச் செப்பனிட வேண்டும் : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
சாலைகளைச் செப்பனிட வேண்டும் : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2011 02:38 AM
புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாலைகளைச் செப்பனிட வேண்டும் என ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவர், உள்ளாட்சித்துறை இயக்குனரிடம் அளித்துள்ள மனு:எனது நெல்லித்தோப்பு தொகுதியில் அமைந்துள்ள புனித விண்ணேற்பு ஆல யம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயம்.
இந்த தேவாலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த விழாவில் கிறிஸ்துவ சகோதரர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு கொண்டாடுவது தனி சிறப்பு.ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடக்கும் போது, நெல்லித்தோப்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் இந்த தேர் வீதியுலா நடத்தப்படும்.தற்போது, இந்த தேர் வீதியுலா நடத்தப்படும் அருள்படையாட்சி வீதி, சவரிபடையாட்சி வீதி, மடத்து வீதி உள்ளிட்ட வீதிகள் மிகவும் மோசமாக காணப்படுவதால், இதனைச் செப்பனிட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.